தமிழில் இலகுவில் தட்டச்சிடுவதற்கு பல வழிகள் உண்டு
- தமிழ் எழுத்துருக்களுக்கு மாற்றி ms word போன்ற பதிவுகளுக்கு பாவிக்க முடியும்.
- யுனிக்கோட்டில் தட்டச்சிடுதல்.
ஆனால் இவ்வாறு (தமிழ் எழத்துருக்களுக்கு மாற்றி) தட்டச்சிட்ட டொக்கியூமென்டை வேறொரு கணணியில் பார்க்க வேண்டு மாயின் அக்கணணியிலும் நாம் தட்டச்சிட்ட அதே எழுத்துரு கண்டிப்பாக தேவையாக இருக்கும். இப்பிரச்சனைககுக்கு தீர்வாக அமைவதுதான் யுனிக்கோட் எழுத்துரு. நாம் யுனிக்கோட்டில் தட்டச்சிட்ட டொக்கியூமென்டை வெண்டுமான கணணிகளில் இலகுவில் பார்க்க்கூடியதாக இருக்கும்.
யுனிக்கோட்டில் எவ்வாறு தட்டச்சிடுதல்?
நாம் யுனிக்கொட்டில் தட்டச்சிடுவதற்கு இணையத்தினூடு சாதாரணமாக நாம் பாமினியில் தட்டச்சிட்ட எழுத்துருவை யுனிக்கோட்டாக மாற்றித்தரும் உம்...http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm .
இதுதவிர இணைய வசதி இல்லாதவர்களுக்கு ஏற்றவகையில் யுனிக்கோட்டில் தட்டச்சிடுவதற்கு ஒரு சிறி மென்பொருள் ஒண்றை நிறுவி அதன்வளி அனைத்து கணனிகளிலும் பார்க்கும் வகை செய்யலாம்.
உதாரணமாக அதற்கென பிரத்தியோகமாக பல மென்பொருள்கள் உள்ளன
- கீமான் keyman
- ஈழப்பிரியா தமிழ் கென்வேட்டர் eelappiriya converter
- என் ஏச் எம் றைட்டர் NHM writer
நான் இங்கு என்ஏச்எம் றைட்டரில் எவ்வாறு தட்டச்சிடுதல் என்று ஒரு சிறு குறிப்பு தரலாம் என எண்ணுகிறேன் (பயனர் பயனுக்காக)
http://software.nhm.in/products/writer என்ற சுட்டியில் நீங்கள் என்ஏச் எம் றைட்டரை தரவிறக்கம் செய்த கொள்ளலாம்.
நீங்கள் சாதரணமாக ஏனைய மென்பொருள்களை நிறுவது போன்று நிறுவியதும் கீழ் உள்ள படத்தில் காட்டியது பொல் உங்கள் கணணியின் ராஸ்க்பார்அல் ஓர் மணிபோன்ற அடைளம் வரும், அதில் சொடுக்கி உங்களுக்கு பழக்கமான கீபோட்டை தெரிவுசெய்து நீங்கள் தட்டச்சிட முடியும்.
http://software.nhm.in/products/converter என்ற சுட்டியில் நீங்கள் என்ஏச் எம் கென்வேட்டரை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த மென்பொருளைப்பயன்படுத்தி நீங்கள் வேறு எழுத்துருவில் இருக்கும் பதிவுகளை உங்களுக்கு வேண்டிய எழுத்துருவுக்கு மாற்றலாம்.
மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள விளக்கப்படத்தைப்பார்க்கவும்.
நீங்களும் தூண்டிவிட்டுப்போகலாம்
ஓர் ஊக்கியாக இருக்கும்..




