நாங்கள் கூடுதலாக ஆங்கிலச் சொற்களுக்கான அர்த்தங்களை தெரிந்து கொள்வதற்கு ஒவ்வொரு துறைசார் ஆங்கில அகராதிகளை தரவிறக்கம் செய்து பாவித்து வந்தோம். ஆனால் அவற்றை இயக்குவதற்கு வழமையாக எங்களுக்கு அர்த்தம் தெரியவேண்டிய சொல்லை பிரதியெடுத்து அதனை அகராதியின் தேடு பொறியில் ஒட்டியே அர்த்தங்களை தெரிந்து கொள்வதை வழமையாகக்கொண்டிருந்தோம். ஆனால் அவற்றையெல்லாம் புரட்டிப்போட்டிருக்கிறது இந்த மென்பொருள்.
இதன் அதீத பயன் தேடுமுறையை வெகுவிரைவாக்கியதோடு மட்டுமல்லாது அனேகமான துறைகளின் சொற்பதங்களை அதற்கான விளக்கங்களுடன் உச்சரித்தும் காட்டும் சிறப்பம்சம் பொருந்தியுள்ளது.
செய்யவேண்டியது இருதான்...
கீழே கொடுக்கப்பட்ட சுட்டியினூடு தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவி.. பின்னர் உங்களுகளுக்கு அர்த்தம் தெரியவேண்டிய சொல்லின் மேல் (CTRL+Right Click) செய்வதால் கீழ் உள்ள படம் போல் ஒரு யன்னல் தோன்றும் அதில் அதுக்கான விளக்கமும் வரும்.
* இதில் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்து கோப்புக்களிலும் உள்ள சொற்களின் அா்த்தத்தை கண்டுகொள்ள உதவுகின்றது....

இம்மென்பொருளை கீழ் உள்ள தொடுப்பில் சொடுக்குவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
நீங்களும் தூண்டிவிட்டுப்போகலாம்
ஓர் ஊக்கியாக இருக்கும்..


