தமிழ்மொழி வாழ்த்து

தான தானத்தன தான தானத்தன தான தந்தானே
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
ஏன்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
தேல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!
வாழ்க தமிழு;மொழி! வாழ்க தமிழு;மொழி!
வாழ்க தமிழு;மொழி யே!

xcv

சர்வதேச கிரிக்கெட் லைவ் ஸ்கோர்ஸ்

சர்வதேச கிரிக்கெட் லைவ் ஸ்கோர்ஸ்

எழுத்துரு மாற்றி

Get This

சர்வதேச கிரிக்கெட் லைவ் ஸ்கோர்ஸ்

சர்வதேச கிரிக்கெட் லைவ் ஸ்கோர்ஸ் cricket live score

எமது பதிவுகள்

திரட்டிகள்

தமிழின் பெருமை 2

Posted by varathan Wednesday, November 26, 2008 0 comments

வலையத்தில் கடைசியாக தேடிப்பிடித்த ஒண்றை நம்மவருடன் பகிர்வதில் மனமகிழ்வடைகிறேன்....

_______________________________________

இலக்கம் - சொல்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

_______________________________________

@ நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

_______________________________________

@ பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

_______________________________________

@ பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

_______________________________________

@ முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

_______________________________________

@ பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

_______________________________________


வலையத்தில் கடைசியாக தேடிப்பிடித்த ஒண்றை நம்மவருடன் பகிர்வதில் மனமகிழ்வடைகிறேன்....

நம்மில் பலருக்கு தெரியாதபல விடயங்கள் எவ்வளவு???????????
வெள்ளயனின் வெளிவேசத்திலே நம் தமிழின் பெருமையையே தொலைக்கும் நிலமைக்கு தள்ளப்பட்டு விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகின்றது...

1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thouand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -?

10000000000000000000 = பரார்த்தம் —?

100000000000000000000 = பூரியம் -?

1000000000000000000000 = முக்கோடி -?

10000000000000000000000 = மஹாயுகம் -??????

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே, நம்மில் பலருக்கு தமிழில் தேடலை மேற்கோள்ள வேண்டும் என்ற தேவை உள்ளது அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான். கீளே கொடுக்கப்பட்டுள்ள இணைபபை சோடுக்கி அல்லது அதனை அட்றஸ் பாரில் பேஸ்ட்பண்ணி விட்டு.அதில் உங்களுக்கு தேவையாணவிடையத்தை தமிங்கிலீஸ்இல் ரைப்செய்து விட்டு.ரைப்செய்யப்பட்ட சொல்லை அல்லதுவசணத்தை கூகிளில் பேஸட் செய்து தேடு என்ற பொத்தானை சொடுக்கினால் பின் வளமையாக நீங்கள் செய்பவைதான்... http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

நன்றி. தமிழ்
இன்னும் சில இலகு முறைகள் உண்டு அவற்றை தொடரும் பதிவில் எதிர் பாருங்கள்.

தமிழ்உணர்வாழன் சீமானின்கருத்துக்கள்.... தமிழ் என்தாய், தமிழ் எங்கள் உயிருக்குமேல்.

அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் ஆடுமேய்ப்பவண் அறிவாளியா?தலைவாசலாக தமிழைவை,விரும்பின் யன்னல்களாக பிறமொழியைவை

என்தாய்மொழியை நான்பேசாமல் எந்தநாய்பேசும்?

சமைக்கும்போது,அரிசியில்உள்ள கல்லைஅகற்றும்எம்சோந்தங்களே ஏன் உண் தாய்மொழியில்உள்ள பிறமொழிச்சோல்லை அகற்ற மறுக்கிறாய்?

நம்மில்கலருக்கு நமதுஇணையத்தின் வேகத்தை அறியவேண்டிய தேவையும் ஆவலும் நிறையவே இருக்கின்றது।அப்படி ஆவல்இருப்பவர்களுக்கு பயன்படட்டும் என்பதற்காக கீளெ ஒருசுட்டி ஒண்றைத்தருகிறேன்.

இணையத்தின்வேகத்தை அறியவதற்குஇங்கேசெல்லவும

100 மெக் (100MB) அளவிலான வீடியோ கோப்பு ஒன்றை நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சல் வழி அனுப்ப விழைகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் அது சாத்தியமாகாது. ஏனெனில் இப்போதைக்கு சத்தியமாய் அக்கோப்பின் அளவு மிகப்பெரிது. ஜிமெயில் போன்ற இலவச மின்னஞ்சல் கொடுப்போர் கூடிப்போனால் 20 மெக் (20MB) அளவிலான கோப்புகளை மின்னஞ்சல் வழி அனுப்ப அனுமதிப்பர். அதற்கும் மேல் போனால் அழகாய் "சாரி" சொல்லிவிடுவர்.

இது போன்ற சந்தர்பங்களில் கை கொடுப்பவை தான் கோப்பு பிரிப்பான்கள், சேர்ப்பான்கள். இதன் மூலம் அந்த 100மெக் கோப்பை நீங்கள் 20மெக் அளவினதாய் ஐந்து துண்டு துண்டாக்கி (Split) தனித் தனி மின்னஞ்சல்களில் நண்பருக்கு அனுப்பலாம். மறுமுனையில் நண்பர் அந்த ஐந்து மின்னஞ்சல் அட்டாச்மெண்ட்களையும் இறக்கம் செய்து கோப்பு சேர்ப்பான் மூலம் எளிதாய் ஒன்றாய் இணைத்துக்கொள்வார் (Join). அவ்ளோதான். 100 மெக் வீடியோ துண்டு மறுமுனை போய் சேர்ந்தாயிற்று.

இது போல் கோப்புகளை பிரிக்க சேர்க்க இரண்டு பிரபல இலவச மென்பொருள்கள் உள்ளன
**அவற்றை அருகில் உள்ள இணைப்புக்கள் என்னும் பகுதியில் தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.**

தமிழ்ப்பற்று

Posted by varathan Monday, February 11, 2008 0 comments

...
தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய் மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ
...
தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழ்ப் பற்று போனவனோ
தன் தலையற்றுப் போனவனன்றோ
...
நம்
மூச்சிலும் காற்றிலும்
கன்னித்தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ
...

நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துகள்
வற்றாது ஓடுதல் கூடாதோ
.....
வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்

....

நாலடியார்

Posted by varathan Friday, February 8, 2008 0 comments

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள
நானூறு சமண முனிவர்கள்
இயற்றிய
நாலடியார்

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்பட்டன. நாலடியாரும் அவற்றுள் ஒன்று. முப்பொருள்களையும் சிறப்புற நான்கடிக்கு மிகாமல் உரைப்பது கீழ்கணக்கு நூல்களின் சிறப்பாகும். இந்நூல் சமண முனிவர் நானூறு பேரால் பாடப்பட்டது.

கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.

கம்பராமாயணம்

Posted by varathan Thursday, February 7, 2008 0 comments


கம்பர்
இயற்றிய
இராமாவதாரம் (கம்பராமாயணம்)
பால காண்டம்

பாயிரம்

கடவுள் வாழ்த்து

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1

சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2

ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன - மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். 3

அவையடக்கம்

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் - எனை!-
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே. 5

வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது எனின்,-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே. 6

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ. 7

முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்:-
'பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?' 8

அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
தறைவில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ? 9

நூல் வழி

தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ. 10

இடம்

நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே. 11

தமிழ் தாய் வாழ்த்து

நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொலுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! தமிழணங்கே!

உன் சீரிளமை திறம் வியந்து
செயல்மறந்து வழ்த்துதுமே! வழ்த்துதுமே! வழ்த்துதுமே!

-"மணோன்மணீயம்" பெ.சுந்தரம்பிள்ளை

Contact Form

Name

Email *

Message *

Wikipedia

Search results

Powered by Blogger.

Translate

Total Pageviews

Popular Posts

Pages

Labels

Followers

ஓ இளைஞனே! நேற்றை எருவாக்கு இன்றை உருவாக்கு...

Cookies notification

Cookies notification in European Union countries European Union (EU) laws require you to give EU visitors information about cookies used on your blog. In many cases, these laws also require you to obtain consent. As a courtesy, we have added the following notice on your blog to help meet these regulations: "This site uses cookies from Google to deliver its services and analyze traffic. Your IP address and user-agent are shared with Google along with performance and security metrics to ensure quality of service, generate usage statistics, and to detect and address abuse." The notice lets visitors know about Google's use of certain Blogger and Google cookies on your blog, including Google Analytics and AdSense cookies. Learn about Google’s privacy practices and how Google uses data on partner sites

Search This Blog

Search This Blog

Featured Post

ms office இல் tab திறத்தல் எவ்வாறு how to open a tap in ms office

ஒரு word கோப்பை எழுதி முடித்து சேமித்த பின் மற்றொரு word கோப்பைஎழுத மற்றுமொரு word சாளரம் தேவைப்படுகிறது. அதிக அளவில் எம்எஸ் ஆஃபீஸ் கோப்பு...